வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் தீடீர் சோதனை நடவடிக்கை

Report Print Thileepan Thileepan in பாதுகாப்பு

வவுனியாவில் உள்ள தேவாலயங்களில் பொலிஸார் இன்று காலை திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

அந்தவகையில், தேவாலயங்களுக்கு மோப்பநாய் சகிதம் சென்ற பொலிஸார் ஆலய வளாகங்களை பரிசோதனை செய்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இலங்கையில் உள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், இரு மாதங்களின் பின் வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் சில நாட்களாக வவுனியாவில் பாதுகாப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

Latest Offers

loading...