இலங்கை வரும் வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு....! விமான நிலையத்தில் ஏற்படப் போகும் நெருக்கடி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சமகாலத்தில் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோரின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் நோக்கில் பெருமளவானோர் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மாதத்தின் ஆரம்பத்திலிருந்து நவம்பர் மாதம் வரையான காலப்பகுதில் இலங்கை வருவதற்காக ஆசன பதிவுகள் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளன.

விமான பயண விக்கெட்டுகளை வழங்கும் நிறுவனங்களினால் மேற்கொண்ட கணிப்பின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

பல விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவை எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக அடுத்து வரும் வாரங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு பயணிகள் வருகை தரவுள்ளமையினால் நெருக்கடி நிலை ஏற்படவுள்ளதாக தெரியவிக்கப்படுகிறது.

நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதன்மூலம் பாதிக்கப்படலாம் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...