கோத்தபாயவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவு

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் கோத்தபாயவுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்த சமூக நடவடிக்கையாளர்கள் காமினி வியாங்கொட மற்றும் சந்ரகுப்த தேனுவர ஆகியோருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பதில் காவல்துறை அதிபர் சீடி விக்ரமரட்ன காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோத்தபாயவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர்களின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே இந்த பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தேனுவர காவல்துறையிடம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அநீதிகளுக்கு எதிராக செயற்பட்ட லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட,போதல ஜெயந்த, கீத் நோயர் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தமக்கு பாடங்களை புகட்டியுள்ளதாக தேனுவர தெரிவித்துள்ளார்.