திருட்டுத்தனமாக எதையும் செய்யமாட்டோம்! இராணுவத் தளபதி பதில்

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

எந்த பிரச்சினை காணப்பட்டாலும் நாம் அதை திருட்டுத்தனமாக செய்வதில்லை. மக்களுக்கு அறிவித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் இன்று இடம்பெற்ற சமயவழிபாடுகளின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இலங்கை இராணுவம் முப்படையினர், பொலிஸார் ஆகியோருடன் இணைந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படுகின்றது. ஜனாதிபதி ஒவ்வொரு வாரமும் பாதுகாப்பு சபையை கூட்டி நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்கின்றார்.

இக்கூட்டத்தில் அனைத்து படைத் தளபதிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் நாட்டின் பாதுகாப்பு குறித்து எடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

எதிர்வரும் 15 - 25 ஆம் திகதிக்குள் ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் கருத்துரைத்த அவர்,

இராணுவத்திற்குள் எடுக்கப்படும் பல நடவடிக்கைகள் குறித்து நாம் தெளிவுபடுத்துவோம். அவைகள் தொடர்பில் மக்களுக்கு எடுத்து காண்பிக்க நடவடிக்கை எடுப்போம். எந்த பிரச்சினை காணப்பட்டாலும் நாம் அதை திருட்டுத்தனமாக செய்வதில்லை.

மக்களுக்கு அறிவித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Latest Offers

loading...