புத்தளத்தில் வெடிப்பு சம்பவம் - அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

புத்தளம், அருவக்காலு குப்பை மேட்டில் நேற்று இரவு திடீர் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிய சத்தத்துடன் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.45 - 9.00 மணி நேரத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எதனால் வெடிப்பு ஏற்பட்டது என்பதை தற்போது உறுதியாக கூற முடியாதென கழிவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பினால் அந்த பகுதியில் எவருககும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் உடனடியாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் இருந்து அருவக்காலு நோக்கி சென்ற 29 குப்பை டிப்பர்கள், ஜாஎல பிரதேசத்தில் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.