கொழும்பு ஹோட்டல்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடக்கவுள்ளதாக போலி எச்சரிக்கை கடிதங்களை அனுப்பிய அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலித் தகவல்களை வழங்கிய கோட்டை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரி பதவிகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.