வெளிநாட்டிலுள்ள இளைஞனை ஏமாற்றிய இலங்கை பெண்! IMO மூலம் இத்தனை மில்லியனா?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

IMO தொழில்நுட்பம் ஊடாக இளம் பெண்களின் புகைப்படங்களை காட்டி வெளிநாட்டில் வாழும் இளைஞனிடம் பெரும்தொகை பண மோச செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடி மூலம் 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகேபொல பனாத பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும், அவர் தனது கணவனை கைவிட்டு வேறு நபருடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கொலொன்ன கும்புருகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு ஒன்றில் தொழில் செய்து வருகின்றார். அவருடன் imo தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு மாத காலமாக இந்த பெண் பேசி வந்துள்ளார்.

இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அதில் இருப்பது தான் என கூறி இளைஞனை ஏமாற்றிய பெண், அவரிடம் 62 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தான் யார் என்ற உண்மையை வெளிப்படுத்திய பெண் இளைஞனின் தொலைபேசி அழைப்பை ஏற்பதனை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய குறித்த பெண்ணின் வங்கி கணக்கை சோதனையிட்ட போது அதில் 2 இலட்சம் ரூபாய் பணம் மாத்திரமே மீதமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers