பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தகவல் தொழில்நுட்ப பிரிவு, பயனாளர்களை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் per.itssl@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சமூக வலைத்தள பயனாளர்களின் கணக்குகளில் ஊடுருவலாம் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்த கூடும் என்பதனால் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் screenshots மற்றும் உரிய link ஆகியவற்றை முறைப்பாட்டுடன் இணைத்து அனுப்புமாறு இலங்கை பயனாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.