இராணுவ வரலாற்றில் 200 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கை இராணுவ வரலாற்றில் 200 அதிகாரிகளுக்கும், 7000 படையினருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, இரண்டாம் லெப்டினன்ட்கள் மூவர் லெப்டினன்ட்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். 17 லெப்டினன்ட்கள் கெப்டன்களான உயர்த்தப்பட்டுள்ளனர்.

15 கெப்டன்கள் மேஜர்களாக்கப்பட்டுள்ளனர். 40 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்னல்களாக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.