நாடாளுமன்றத்திற்கு வருகிறது தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை!

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு தமது இறுதி அறிக்கையை ஒக்டோபர் 23ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

பிரதி சபாநாயகரும் குறித்த குழுவின் தலைவருமான ஆனந்த குமாரசிறி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு சுமார் 60 பேரிடம் சாட்சியங்களை பதிவுசெய்தது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் குழுவின் முன்னால் சாட்சியமளித்தனர்.

இந்தநிலையில் தாக்குதல்களுக்கான காரணங்கள் மற்றும் இவ்வாறான தாக்குதல்களை தடுக்கும் வழிகள் குறி;த்து நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஒக்டோபர் 24ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்படும் என்றும் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.