கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு! தப்பி ஓடிய பொலிஸார்

Report Print Suman Suman in பாதுகாப்பு

கிளிநொச்சி, முறிகண்டி பகுதியில் டிப்பர் வாகனம் மீது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 7.20 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் தப்பியோட்டியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்து வீதிக்கு டிப்பர் வாகனத்தை சாரதி செலுத்திய போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக குடும்பத்தினர் தகவல் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, டிப்பர் வாகனத்தின் பின் சில்லில் துப்பாக்கி சன்னம் பாய்ந்துள்ளதாகவும் இச்சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் உடனடியாக 119 அவசர பொலிஸாருக்கு அழைத்து முறைப்பாடு செய்தபோதிலும் உடனடி விசாரணை இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...