பேஸ்புக் ஊடாக கசியும் அந்தரங்க தகவல்கள்! பயனர்களுக்கு எச்சரிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
455Shares

இலங்கையில் பேஸ்புக் ஊடாக பலரின் தனிப்பட்ட தகவல்கள் கசியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கணிப்பு என்ற பெயரில் வாக்காளர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் மோசடி செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கணிப்பு என கூறி அடையாளம் தெரியாத தரப்பினால் இணையத்தளங்களில் பேஸ்புக் ஊடாக தரவுகள் சேகரிக்கப்படுகின்றது.

அத்துடன் பயனாளர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் www.votesl.com என்ற இணையத்தளத்தின் கீழ் நடத்தப்படும் கண்கானிப்பின் ஊடாக, பொது மக்களின் தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படும் இணையத்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் தொடர்பிலும் பொறுப்பு கூறும் தரப்பினர் தொடர்பிலும், எந்தவொரு தகவலும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணையத்தளங்களின் பெயர்கள் பேஸ்புக் பக்கங்களும் இயங்குகின்றது. இந்த பேஸ்புக் பக்கம் இயங்கும் நாடு மற்றும் அந்த பேஸ்புக் பக்கத்தை கட்டுப்படுத்துபவர்கள் தொடர்பிலும் தகவல் வெளியிடுவதற்கு பேஸ்புக் நிறுவனம் தவறியுள்ளதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே தனிப்பட்ட தகவல்களை எவரிடமும் வழங்க வேண்டாம் என இலங்கையர்களிடம் தகவல் தொழில்நுட்ப பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.