யாழ்ப்பாணம் சென்ற கோத்தபாயவுக்கு ஏற்பட்டுள்ள சர்ச்சை! தென்னிலங்கையில் மறைக்கப்பட்ட தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வடபகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதி தென்னிலங்கை மக்களுக்கு மறைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் வடபகுதியில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட கோத்தபாய, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக தமிழ் மக்கள் மத்தியில் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாண நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் பங்கேற்க கோத்தபாய மறுத்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையா என குறித்த ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனாதிபதியாக தெரிவானால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக கோத்தபாய வடபகுதி மக்களுக்கு வழங்கிய முதல் வாக்குறுதியாகும்.

கோத்தபாயவுக்கு திடீரென அரசியல் கைதிகள் மீது அனுதாபம் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் மீது திடீர் அனுதாபம் எப்படி ஏற்பட்டதென குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வழக்கு விசாரணையை தவிர்த்த கோத்தபாய, தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.