இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபத்திற்கு சென்றவர்களை பலவந்தமாக தடுத்து நிறுத்தியமையினால் நேற்று மாலை குழப்ப நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக சேறு பூசும் பிரச்சார நடவடிக்கை ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வினவுவதற்காக சென்றவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக இந்த பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்ததாக கொழும்பு பதில் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரிப்பதற்கு செல்வதற்கு தனக்கு அதிகாரம் உள்ள போதிலும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் உள்ளவர்களால் தான் உட்பட குழுவினரை பலவந்தமாக தடுத்து வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அங்கு நேற்று மாலை குழப்பமான சூழல் ஒன்று ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.