கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட குழப்பம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின்சார தடையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் தலைவர், விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து அதிகாரி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று காலை 9.20 மணியளவில் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சார தடை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இயங்கும் விமான நிலைய ஜெனரேட்டர் கட்டமைப்பு இயங்காமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன், பயணிகளுக்கும் பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.