ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பு, செதெம் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்கு கு 5 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்படுத்தியதாக தீயணைப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் ஆராய்வதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தீ அனர்த்தம் ஏற்பட்ட போது கொழும்பின் பல இடங்களில் இதனால் மின் விநியோகம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.