நாளை அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு! தென்னிலங்கையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாளைய தினம் பிரச்சார கூட்டங்கள் இடம்பெறும் அனைத்து பிரதேசங்களுக்கும் தீவிர பாதுகாப்பு வழங்குவதற்கு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விசேடமாக நாளைய தினம் காலி, மாளிகாவத்தை மற்றும் தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் இடம்பெறும் மக்கள் கூட்டங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

காலி மற்றும் மாளிகாவத்தை பிரதேசங்களில் சஜித் பிரேமதாஸவின் பிரச்சார நடவடிக்கை இடம்பெறவுள்ள நிலையில், தர்கா நகரத்தில் அனுரகுமார திஸாநாயக்கவின் பிரச்சார நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் இந்த பிரதேசத்தினுள் நாளைய தினம் இனவாத தரப்பினால் குழப்ப நிலையை ஏற்படுத்துவதற்கான ஆபத்து காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.