பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சென்றவர்களால் குழப்பம் - பொலிஸார் சுற்றி வளைப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

குழப்பம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் ரம்புக்கன, பத்தம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 12 துப்பாக்கிகள், வாள் மற்றும் கத்தி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடிகமுவ, யட்டிவெல்தெனிய மற்றும் வஹவ ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை மாவனெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.