இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தினால் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நாளிலும் அதன் பின்னர் வன்முறை இடம்பெற கூடும் என்பதனால் தகுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பிரித்தானிய வெளிவிவகார உயர்ஸ்தானிகராலயம் அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் அதிகம் நடமாடும் கூட்டங்கள், பேரணி ஆகியவைகள் இடம்பெறும் பகுதிகளை தவிர்க்குமாறும், பாதுகாப்பு பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளுக்கமைய செயற்படுமாறு பிரித்தானிய பயணிகளுக்கு விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.