பதற்றத்தை ஏற்படுத்துவோர் தப்பிச் செல்ல முடியாது! எவரும் அச்சப்பட வேண்டாம்! பொலிஸார் அறிவிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அச்சம், சந்தேகமின்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களியுங்கள்.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, புலனாய்வு பிரிவினர், கலகம் அடக்கும் குழுவினர், பொலிஸ் நடமாடும் சேவை உட்பட அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குழப்பம் ஏற்படுத்தி விட்டு எந்த முறையிலும் தப்பிச் செல்ல முடியாத வகையில் பொலிஸ் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

60 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். எந்த ஒரு குழப்ப நிலைமையும் ஏற்படாது.

சுதந்திரமான முறையில் பொது மக்கள் தங்கள் வாக்குகளை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.