ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வழங்கிய முதலாவது நியமனம்!

Report Print Murali Murali in பாதுகாப்பு

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புதிய பாதுகாப்பு செயலாளரை நியமித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7வது ஜனாதிபதியாக கோத்தபாய பதவி​ப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், வழங்கப்பட்ட முதலாவது நியமனம் இதுவாகும்.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இறுதிப்போரின் போது, இராணுவத்தின் 53வது படையணிக்குத் தலைமைத் தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Party wise Results