கொழும்பிலுள்ள பிரபல ஊடக நிறுவனத்தை சுற்றிவளைத்த பொலிஸார்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொழும்பிலுள்ள பிரபல சிங்கள இணைய செய்தி ஊடக நிறுவனத்திற்குள் புகுந்த பொலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மீரிஹானவில் உள்ள செய்தி நிறுவனத்தில் நேற்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான சான்றுப் பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த தேடுதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தேடுதல் ஆணையின் படி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் அங்கு எந்தவொரு தடயப் பொருட்களும் கிடைக்கவில்லை என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.