ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய காத்தான்குடியில் தீவிரமடையும் சட்டம்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தலைகவசம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதிகளில் தலைகவசமின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தண்டப்பணம் விதிக்காமல் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தலைக்கவசம் இன்றி பயணித்த 50 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பிரதேச மக்கள் நீண்ட காலமாக தலைவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.