பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்னவை சந்தித்துப் பேசிய ஐ.நா அதிகாரிகள்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

ஐக்கிய நாடுகளின் போதை மற்றும் குற்றங்கள் தொடர்பான அதிகாரிகள் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கமல் குணரட்னவை சந்தித்துள்ளார்.

மிவா காட்டோ என்ற அதிகாரியின் தலைமையில் நான்கு பேரைக்கொண்ட குழு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றது.

இதன்போது இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்புக்கான பயிற்சிகள் மற்றும் வலுவூட்டல் என்பன தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் யூஎன்ஓடிசி அமைப்பு அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் பயிற்சிகள் மற்றும் கடத்தல்கள் என்பவற்றை குறைப்பதற்கான திட்டங்களை பல நாடுகளிலும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.