கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி! பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்காக, நுழைவாயிலிருந்து பேருந்து சேவை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

நேற்று மாலை விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் ஆராயும் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருடாந்தம் 6 மில்லியன் பயணிகள் வருகை தருவதற்கான வசதிகள் மாத்திரமே உள்ள போதிலும் தற்போது 12 மில்லியன் வரையான பயணிகளாக அதிகரித்துள்ளனர்.

அதற்கு பொருத்தமான அபிவிருத்திகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அந்த நடவடிக்கைகள் தடைப்பட்டது.

எனினும் அந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அதற்கமையவே இந்த பேருந்து சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.