பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ பதவியேற்பு!

Report Print Murali Murali in பாதுகாப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சிற்கு வருகைதந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுடன், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு படைகளின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

இங்கு இடம்பெற்ற “செத் பிரித்” விஷேட சமய வழிபாடுகளுக்கு மத்தியில் மகா சங்க நாயக்கர்களின் ஆசீர்வாதத்துடன் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு இராஜாங்க அமைச்சர், தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில், நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

சமல் ராஜபக்ஷ, மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராகவும், உள்நாட்டு வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.