சீரற்ற காலநிலையால் சிறைச்சாலையில் ஏற்பட்ட அனர்த்தம் - கைதிகளின் உயிருக்கு ஆபத்து

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை சிறைச்சாலையின் பாதுகாப்பு மதில் உடைந்து விழுந்தமையினால் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

35 அடி உயரமான இந்த பாதுகாப்பு மதிலின் பின் பக்கம் , தொடர் மழை காரணமாக மண் சரிவுக்குள்ளாகியுள்ளது.

மண்சரிவுக்குள்ளாகிய பகுதி முழுமையாக பொலித்தீன் போன்றவற்றால் மூடி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது 800 இற்கும் அதிகமான கைதிகள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மதில் உடைந்துள்ளது.

மதிலின் உள் பக்கம் மேலும் உடைந்தால் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அங்குள்ள உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...