விசேட அதிரடி படையினரின் நடவடிக்கை! நாடு முழுவதும் சிக்கும் குற்றவாளிகள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நாடு முழுவதும் போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலக குழு குற்றவாளிகளை பிடிக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 6 பாதாள உலக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹங்வெல்ல பாதாள உலக குழு உறுப்பினரான இந்திரா என்பவர் என குறிப்பிடப்படுகின்றது.

பாரிய குற்ற செயல்கள் பலவற்றில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவரை கடத்தி சென்று கொலை செய்த சந்தேக நபர்களும் இவர்களுக்குள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது

இதேபோல் நாடு முழுவதும் கடமையில் உள்ள விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers

loading...