கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி போட்ட உத்தரவு! உடனடியாக நீக்கப்பட்ட பதாகை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து கட்டுநாயக்கவில் நிர்மாணிக்கப்பட்ட பதாகையை ஜனாதிபதியின் உத்தரவில் நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் உள்நுழையும் வீதியில் இந்த பதாகை நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திருப்பிய போது, ஜனாதிபதி அந்த பதாகையை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய இன்றைய தினம் அந்த பதாகை நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.