தேசிய புலனாய்வு பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்?

Report Print Murali Murali in பாதுகாப்பு

இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜபா ரெஜிமென்ட்டின் முன்னாள் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது, உருவாக்கப்பட்ட ஜனாதிபதி காவல்படையின் தளபதியாகவும் பணியாற்றினார். அத்துடன், இஸ்ரேலுக்கான இலங்கை துணைத் தூதுவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.