சில நகரங்கள் தாழிறங்கும் அபாய நிலையிலுள்ளதாக துறைசார் அமைச்சர் எச்சரிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

சீரற்ற காலநிலையினால், சில நகரங்கள் தாழிறங்கும் அபாய நிலை உருவாகியுள்ளதால் அதனைச் சீர்செய்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என்று நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை அனைத்துத் திணைக்களங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்போது மதீப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை நிலப்பரப்பிற்குள் புதிதாக 69 ஹெக்டயர் நிலப்பரப்பை ஒன்றிணைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

தற்போது துறைமுக நகரத்தை மண்ணிட்டு நிரப்பும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரத்தை நிர்வகித்தல் மற்றும் வரி நிவாரணம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முதலீட்டுச் சபை மற்றும் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...