விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்னும் உயிர்புடன் இருக்கின்றது! பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை

Report Print Murali Murali in பாதுகாப்பு

விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன (ஓய்வு) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள அகுறேகொட புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதிக்கு பாதுகாப்பு செயலாளர் இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன (ஓய்வு) பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்ற பின்னர் புதிய தலைமையகத்திற்கு மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

இதன்போது, அங்கு உரையாற்றிய அவர் “தேசிய பாதுகாப்பின் பொறுப்பை ஏற்கவும், ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த ஏப்ரல் 21 தாக்குதல்கள், மிக உயர் மட்டத்தில் பொறுப்புகளில் இருந்த நபர்களின் முழுமையான அலட்சியம் மற்றும் அறியாமை தவிர வேறு ஒன்றும் இல்லை. இது இஸ்லாம் மதத்தை தவறாக வழிநடத்திய ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

இஸ்லாம், பெரும் நற்பண்புகளைக் கொண்ட ஒரு மதமாக இருப்பதுடன், ஒருபோதும் அப்பாவி பொதுமக்களைக் கொலை செய்வதை ஆதரிக்கவில்லை. இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், தேசத்தின் பாதுகாவலர்களாகிய நாங்கள் இத்தகைய வன்முறைகளை மீண்டும் செய்ய அனுமதிக்கக்கூடாது, ”என்று பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.

இதேவேளை, நாடு பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டாலும், விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers

loading...