திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தது ஜப்பானிய கடற்படை கப்பல்!

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

DD-102 Harusame என்ற ஜப்பானிய கடற்படைக் கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நல்லெண்ண விஜயமாகவே இந்தக் கப்பல் திருகோணமலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கப்பலின் தலைவர் கொமாண்டர் ஒஸ்ஸிமா டெருஸியா இலங்கையின் கிழக்கு பிராந்திய கொமடோர் சஞ்சீவ டயஸூடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

4550 தொன் எடையைக் கொண்ட இந்தக் கப்பலில் 165 படையினரும் கப்பல் பணியாளர்களும் பயணிக்கின்றனர். 3 நாள் விஜயத்தை முடித்துக்கொண்ட இந்தக் கப்பல் எதிர்வரும் 12ம் திகதி திருகோணமலையில் இருந்து புறப்படவுள்ளது.

Latest Offers

loading...