இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்படவில்லை! சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கைக்கான சுவிஸ் தூதுவரை உடனடியாக நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை சுவிஸ் வெளியுறவுத் துறை திணைக்களம் நிராகரித்துள்ளது.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர் செய்த முறைப்பாட்டிற்கமைய இலங்கைக்கான தூதுவர் திரும்பி அழைக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த செய்தியை சுவிஸ் மத்திய வெளியுறவுத் துறை திணைக்களம் நிராகரித்துள்ளது.

இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் H.E.Hanspeter Mock திரும்ப அழைக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ் தூதுவர் கொழும்பில் தனது கடமைகளை நிறைவேற்றி வருகிறார் என சுவிஸ் மத்திய வெளியுறவுத் துறை திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்தத் தகவல்களை குறிப்பிட்டுள்ளது.