நாளை யாழ்ப்பாணம் செல்கின்றார் பாதுகாப்பு செயலாளர்!

Report Print Murali Murali in பாதுகாப்பு

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாண பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெறவுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பிலான உயர்மட்டக் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலுக்கு வடக்கு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முப்படைகளின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Offers

loading...