கோட்டாபயவின் வருகையால் தலைதெறிக்க ஓடும் பாதாள உலகக் குழுவினர்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததனை தொடர்ந்து பாதாள உலக குழுவினரின் செயற்பாடு 100 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் பரவி இருந்த பாதாள குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், கப்பம் பெறல், கொள்ளைகள், தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல் போன்றவைகள் தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆய்வு அறிக்கைகளில் தெரியவந்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் மறைந்திருந்த பாதாள உலக குழுவினர்கள் தங்கள் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு இரகசிய வாழ்க்கையை வருவதாகவும் சிலர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டின் எந்த பகுதியிலும் பாதாள உலக குற்றங்கள், கொலைகள் மற்றும் பாரிய கொள்ளைகள் தொடர்பான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Latest Offers

loading...