புலனாய்வு அமைப்புக்களுக்கு இணையத் தாக்குதல்களை கையாளும் பயிற்சி

Report Print Banu in பாதுகாப்பு

எதிர்காலத்தில் இணைய தாக்குதல்களை கையாளும் வகையில் இலங்கை புலனாய்வு அமைப்புகளுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்று சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு கற்கைகள் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் இணைய தாக்குதல் அச்சுறுத்தலை அங்கீகரித்து அவற்றைச் சமாளிப்பதற்கான வழி முறைகளை ஏற்படுத்தியுள்ளன. எனினும், இலங்கையின் தயார்நிலை போதுமானதாக இல்லை. இலங்கை புலனாய்வு அமைப்புகளும், தொடர்புடைய நிறுவனங்களும் இணையத் தாக்குதலை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

புலனாய்வு அமைப்புகளுக்கு இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் தரவு சேகரிப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தாக்குதல் நடத்துபவர்களின் சமூக ஊடகங்கள் மூலம் பயங்கரவாத தாக்குதல் பற்றிய தகவல்களை புலனாய்வு அமைப்புகள் பெற்ற உதாரணங்கள் பல உள்ளன.

இலங்கை புலனாய்வு அமைப்புக்கள் தயாராக இருக்க வேண்டும். இது ஒரு முக்கியமான துறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...