ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவுக்கு அமைய யாழ்ப்பாணத்தில் தீவிர சோதனை நடவடிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முதல் மும்படையினராலும் தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

வாள்வெட்டு குழுக்களின் சமூக விரோத செயல்களை அடக்கும் வகையில் யாழ்ப்பாணம் அரசடி பகுதியினை மையமாக வைத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஊடாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்திருந்தனர்.

யாழ் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பாரிய வாள்வெட்டு சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் பொதுமக்கள் பொலிஸார் மீது நம்பிக்கையினை இழந்திருந்தனர்.

தற்போதைய ஆட்சியில் இராணுவத்தினர் வீதியில் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளதை அடுத்து, வன்முறை சம்பவங்கள் வழிப்பறி கொள்ளை, மற்றும் விபத்து சம்பவங்கள் என பல்வேறு செயற்பாடுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு பொது மக்களின் வீடுகளும் சோதனையிடப்பட்டுள்ளது.