திருகோணமலை மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு

Report Print Mubarak in பாதுகாப்பு

நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வேண்டுகோளின் பேரில் இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், முப்படையினரும், பொலிஸாரும் விசேட நடவடிக்கைகள் எடுத்துள்ளதோடு இம்மாவட்டத்தின் நகரிலுள்ள விசேட தேவாலயங்களுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தின் நகரிலும் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

தேவாலயத்தினுள் செல்வோரின் அடையாள அட்டை மற்றும் பைகளும் சோதனை செய்யப்பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை சோதனைச்சாவடிகளிலும் வாகனங்கள் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.