இன்று முதல் நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய முப்படையினர்! ஜனாதிபதியின் உத்தரவு

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

நாடு முழுவதும் பொதுப்பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்வதற்காக ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

இதனடிப்படையில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை, விமானப்படை என்பன இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை உட்பட 25 நிர்வாக மாவட்டங்கள் மற்றும் தேசிய நீர் பரப்பு அடங்கலாக முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.