யாழில் ஆயுதக் குழுக்களை தேடி படையினர் விசேட சுற்றிவளைப்பு

Report Print Varun in பாதுகாப்பு

யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் ஆவா குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களை கைது செய்ய சிறப்பு தேடுதல் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் பங்கேற்றதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறப்பு தேடுதல் நடவடிக்கை இன்று அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகர எல்லை மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வீடுகள் உள்ளிட்ட பிரதேசத்தின் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண நகரத்தை மையமாகக் கொண்ட ஆவா குழு, அஜித் கேங் ஆகியவற்றிற்கு தொடர்புடைய உறுப்பினர்களை கைது செய்வதே இந்த தேடல் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

Latest Offers

loading...