கம்பஹாவில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கம்பஹா, ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற தூப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் வாடகைக்கு வாகனங்கள் வழங்கும் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை, ராகமையிலுள்ள நபருக்கு வழங்குவதற்காக சென்றுள்ளார். இதன்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எனினும் இளைஞன் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இன்னமும் வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.