இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்க முன்வந்துள்ள ஈரான்!

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கையின் காவல்துறையினர் மற்றும் முப்படையினருக்கு பயிற்சி வசதிகளை வழங்க ஈரான் முன்வந்துள்ளது.

ஈரானிய தூதுவர் ஸாயிரி அமிரனி இன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவை சந்தித்தபோது இந்த உறுதிகளை வழங்கியுள்ளார்.

இலங்கையில் முப்படையினரும் காவல்துறையினரும் அமைதி ஒழுங்கை காப்பாற்றி வருகின்றனர்.

இந்தநிலையிலேயே அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க தயாராக உள்ளதாக ஈரானிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.