வாகனங்கள் கொள்வனவு செய்வதில் ஜனாதிபதி போட்ட தடை உத்தரவு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

எதிர்வரும் 3 வருடங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தியுள்ளார்

இது தொடர்பில் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தற்போது அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கைகளை கணக்கெடுத்து அதனை முகாமைத்துவம் செய்யும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் வாகனம் கொள்வனவு செய்து அவசியம் என்றால், அது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதுவரையில் அரச நிறுவனங்களின் வாகன முகாமைத்துவம் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக தேவையற்ற வாகன கொள்வனவுகள் காரணமாக பொது மக்களின் பணம் கோடி கணக்கில் வீணாக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.