ஹப்புத்தளையில் நடந்த விமான விபத்து - விமானத்திலிருந்து எச்சரித்த அதிகாரிகள்! நேரில் பார்த்த பெண் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஹப்புத்தளையில் நேற்று காலை இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் 4 விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்தமை தொடர்பில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

விமானத்தில் இருந்து தங்களை விலகி செல்லுமாறு கூறியதாக, விபத்தினை நேரில் பார்த்த எம்.முனம்வரா என்ற பெண் தெரிவித்துள்ளார்.

“எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் வீட்டிற்கு வெளியே வெயில் காய்ந்து கொண்டிருந்தனர். என்றும் இல்லாதவாறு குறித்த விமானம் கீழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

இதனை பிள்ளைகளுக்கு காண்பிக்க முயற்சித்தேன். அப்போது வீட்டிற்கு முன்னால் இருந்த மரத்தில் லேசாக உரசி சென்றதனை காண முடிந்தது.

விமானத்திலிருந்த ஒருவர் கைகளை வெளியே நீட்டி எங்களை ஒதுங்குமாறு கூறினார். அவ்வாறு கூறும் போதே விமானம் மற்ற பக்கம் திரும்பியது. திரும்பி சற்று நேரத்திற்கு பாரிய சத்தம் கேட்டது.

குறித்த விமானம் கீழே விழுந்து வெடித்ததில் கறுப்பு நிற புகை வெளியேறியது. அங்கிருந்த மக்கள் தண்ணீருடன் விமானம் விழுந்த பகுதியை நோக்கி ஓடினர். தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.