ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கியஸ்தர் வீட்டில் சற்றுமுன்னர் சுற்றிவளைப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணி நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் சற்றுமுன்னர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையானது ஐக்கிய தேசியக் கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

இது தொடர்பான நேரடி காட்சிகளை ரஞ்சன் ராமநாயக்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.