கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்கள் தொகை ஒன்றை அபுதாபியில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பை சேர்ந்த 28 மற்றும் 38 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைத்தொழிலில் ஈடுபடும் இருவர் என குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் இருவரும் நேற்று காலை அபுதாபியில் இருந்து யூ.எல் - 208 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

அவர்கள் இருவரது பையிலும், 35,98,800 ரூபா மற்றும் 59,980 ரூபா பெறுமதியான சிகரெட்கள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.