சுவிஸ் பிரஜைகளான ஆண், பெண் அடங்கலாக இருவர் இலங்கையில் கைது!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
539Shares

சுவிட்சர்லாந்து நாட்டு பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசா அனுமதி பத்திரமின்றி தங்கியிருந்த நிலையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் ஹிக்கடுவ பொலிஸ் பிரிவின் மில்லன்கொட வத்தை பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆணும் பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான சுவிஸ் பிரஜைகள் இருவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.