கொழும்பில் முகாமிட்டுள்ள சுவிஸ் புலனாய்வு பிரிவு! விசாரணைகள் தீவிரம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
1226Shares

சுவிட்சர்லாந்து அரசாங்க புலனாய்வு பிரிவு குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் நோக்கில் இந்தக் குழு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கொழும்பில் முகாமிட்டுள்ள புலனாய்வு குழு பல்வேறு மட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றுக்கொள்ளப்படும் தகவல்கள் உடனுக்குடன் சுவிஸ் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படுவதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.