இலங்கையின் நான்கு மலைகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்து

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

பதுளை - ஹல்துமுல்ல - ருக்கத்தன மலை மற்றும் கஹட்டதலாவ ஆகிய மலைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 4 ஏக்கர் காடு அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்களுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இதேவேளை, ஹந்தான மலையிலும் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்திற்கு மனிதர்களின் செயற்பாடுகளே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.